Skip to content
Home » பெரம்பலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து…. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

பெரம்பலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து…. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

  • by Authour

17A என்ற அரசு பேருந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் புறப்பட்டு கொளகாநத்தம் அருகே உள்ள குளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை காளமேகம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். 11:45 மணியளவில் சாத்தனூர் குடிக்காடு அருகே பேருந்து சென்ற போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளி த்தில் கவிழ்ந்து மரத்தின்

மீது மோதியது.விபத்தில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து அதில் பயணித்த சுமார் 10 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மருவத்தூர் போலீசார் காயமடைந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *