திருச்சி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நல்லாட்சி அனுசரிப்பு வாரம் சிறப்பு முகாம்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.கோ அபிஷேகபுரம் கோட்ட முகாமில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், கமிஷனர் வைத்தியநாதன் கோட்ட தலைவர் விஜயலட்சுமி கண்ணன்,கவுன்சிலர்கள் சோபியா ராணி,விஜயா ஜெயராஜ்,கமால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களை அளித்தனர்.அதன்பிறகு மனு மீது விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது.திருச்சி உறையூர் லிங்க நகர் குடியிருப்போர் நல்ல பாதுகாப்பு சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் கார்த்திக் ஆகியோர் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கோரிக்கை மனு கொடுத்தனர் அந்த மனுவில் திருச்சி உறையூர் லிங்கநகர் பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் பல ஆண்டு காலமாக தெரு சாக்கடை வேண்டி பலமுறை மாநகராட்சியிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தற்போது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து தேவையான இடங்களில் தெரு சாக்கடை அமைத்து தர வேண்டும்.
இதேபோன்று இரண்டு மாதங்களுக்கு முன்பு லிங்க நகரில் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணி நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணி பாதியிலே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே உடனடியாக வாய்க்கால்களை தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளனர்.