Skip to content
Home » ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் திருட்டு….

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே புனவாசிப்பட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று நள்ளிரவு 2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை கடப்பாரையால் பெயர்த்தெடுத்து அதிலிருந்து 2 லட்சம் பணத்தினை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி உண்டியல் காணாமல் போனதை கண்டு லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லாலாபேட்டை காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீசார் அங்க பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவு நேரத்தில் பொம்மை முகமூடி மற்றும் கையில் கிளவுஸ் அணிந்தும், மேல்சட்டை இல்லாமல், காவி வேட்டியை கோவனம் போல் கட்டி வந்த மர்ம நபர் கடப்பாறையை கொண்டு வந்து உள்ளே உண்டியலை பெயர் தெடுத்து செல்லும் காட்சிகளும்,

அவருக்கு உதவியாக கோவிலுக்கு வெளியே ஒருவர் நின்று அவளியாக வாகனங்கள் வந்தால் அவரை எச்சரித்து வெளியே வந்து பதுங்கி கொள்ளும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் உண்டியலை பெயர்த்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் கோவிலின் பின்புறம் இரண்டு உண்டியலையும் வைத்து பூட்டை உடைத்து அதிலிருந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் அவசரகதியில் ஆட்கள் வருவதற்குள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகையில் ஆங்காங்கே பணம் கீழே சிதறி கிடந்துள்ளன. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு லாலாபேட்டை போலீசார் உண்டியல் பணத்தினை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஏற்கனவே இரண்டு முறை உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளது என்பதும், கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த நபர் ஒருவரின் டிப்பருடன் கூடிய டிராக்டர் திருடுபோயிள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலுக்கு எதிரே உள்ள அங்காளம்மன் கோவிலில் பூட்டை உடைத்தும் உண்டியலை திருடுவதற்கான முயற்சிகள் நடந்துள்ளன.

மேலும் கோவில் உண்டியலை திருட வந்த மர்ம நபர் சிசிடிவி யில் தனது முகம் பதியாமல் இருப்பதற்காக பொம்மை முகமுடி மற்றும் போலீசில் மாட்டாமல் இருப்பதற்காகவும் கைரேகைகள் பதிய கூடாது என்பதற்காக கையுறை அணிந்தும் உண்டியலை களவாடிச் சென்ற பலே திருடர்கள். இந்த சம்பவம் அப்பபகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *