பெரம்பலூர் அடுத்த கோனேரி பாளையம் அருகில் இன்று கலைச்செல்வி கருணாலயா நிறுவனத்தின் சார்பில் முதுயுகம் முதியோர் இல்லம் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய கலைச்செல்வி கருணாலயா நிறுவனர் பேசுகையில் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் சார்பில் சுமார் 40 ஆண்டு காலமாக சேவை செய்து வருவதாகவும், மேலும் தமிழகம் முழுவதும் 12 இல்லம் நடத்தி வருவதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் டிம்கென் இன்ஜினீயரிங் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது மேலாளர்
சக்திவேல், மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, எஸ்எஸ்சிஓ நிறுவன இயக்குநர் சங்கர் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மேலும் ராஜேஸ்வரி அம்மாள், கிருஷ்ணகுமார் குணசேகரன் சக்திவேல் இரஞ்சினிதேவி, மேலும் முதியோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.