சென்னை, கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை டீ கடைக்கு சென்ற போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த இரண்டு நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர் . மேலும் இது தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.