Skip to content
Home » ஆம்புலன்சில் பெண் உயிரிழப்பு…. அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல்…

ஆம்புலன்சில் பெண் உயிரிழப்பு…. அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல்…

  • by Authour

கோவை, வால்பாறையில் இருந்து ஆம்புலன்ஸில் பொள்ளாச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பெண் உயிர் இழப்பு,உறவினர்கள் சாலை மறியல். பொள்ளாச்சி-ஏப்-26 வால்பாறை நடுமலைச் சேர்ந்த குறிஞ்சி மலர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த கௌதமன் என்பவருக்கு பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. கௌதமன் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்,இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. குறிஞ்சி மலர் இரண்டாவது முறையாக கர்ப்பமானர்,இதை அடுத்து குறிஞ்சி மலர் வால்பாறையில் நடுமலையில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மதியம் பிரசவ வலி ஏற்படவே வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறிஞ்சி மலர்க்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. குறிஞ்சி மலருக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் வரும் வழியில் குறிஞ்சி மலர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோபம் அடைந்த உறவினர்கள் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்,தகவல் அறிந்து வந்த வால்பாறை துணை கண்காணிப்பாளர் சபரி வாசன்,பொள்ளாச்சி ஏ. எஸ். பி. பிருந்தா பேச்சுவார்த்தை அடுத்து உறவினர்கள் சாலை மறியல் கைவிட்டனர்,குறிஞ்சி மலர் உடல் கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பிரத பறி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் வால்பாறையில் குறிஞ்சி மலர் இருந்த அறையில் மின் விளக்குகள் இல்லாததால் மொபைல் போனில் டார்ச்சர் பிரசவம் பார்த்து உள்ளனர். கடைசியில் தான் மருத்துவர்கள் வந்து உள்ளனர். மேலும் ஆம்புலன்சில் மருத்துவர்க்கு உதவியாளர்கள் இல்லாததாலும் கூடுதல் சிகிச்சை அளிக்க உபகரணங்கள் மருத்துக்கள் இல்லாமல் இருப்பது குறிஞ்சி மலர் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *