கடந்த மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மோடி சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் பாஜக முன்னாள் அமைச்சர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் கோர்ட் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. டில்லியில் எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட அவரது வீட்டையும் மத்திய அரசு காலி செய்தது.
இந்த நிலையில் சூரத் கோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து ராகுல் குஜராத் மாநில ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார், இந்த அப்பீல் மனு வரும் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.