தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், ஹோட்டல்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள்ளிட்டவைகளுக்கு முன்பு தற்காலிக மேற்கூரைகள் அமைத்தும், விளம்பர பெயர்
பலகைகள் அமைத்தும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் கரூர் நகர காவல் துறை பாதுகாப்புடன் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணி நடைபெற்றது.
மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது