அரியலூர் மாவட்டம் செந்துறை உடையார் பாளையம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி, இவர் பிஎஸ்என்எல் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று தனிமையில் வசித்து வருகிறார். கடந்த 16ம் தேதி உறவினரை பார்க்க நாகர்கோயில் சென்றுள்ளார்.
இன்று காலை இவரது வீட்டின் முன் பகுதி விளக்கை அணைக்க பக்கத்தில் கடை வைத்திருக்கும் மெக்கானிக் சென்றபோது வீட்டின்முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை காணவில்லை, இதனையடுத்து ராமசாமியை தொடர்பு கொண்ட மெக்கானிக் ஊருக்கு வந்து விட்டீர்களா என கேட்டுள்ளார், அப்போது அவர் நாகர்கோயிலில் இருப்பதாக கூறியுள்ளார்.
எ
வீட்டின் முன்பிருந்த ஸ்கூட்டரை காணவில்லை என தெரிவித்தார். வேறு இடத்தை சோதனை செய்து பார்க்குமாறு கூறியுள்ளார், அப்போது வீட்டின் முன் பக்க பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருப்பதாக கூறினார். இதனையடுத்து செந்துறை போலீசார் மற்றும் அருகில் உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்த உறவினர்க்கு தகவல் கொடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகளுக்கு இடையே வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு போனது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.