புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மற்றும் MMT & NURTURE அமைப்பும் இணைந்து நடத்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, இன்று (26.04.2023) துவக்கி வைத்து உரையாற்றினார். உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) .ஆ.ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.