தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை இரவு டில்லி செல்கிறார். நாளை மறுநாள் (வெள்ளி) ஜனாதிபதியை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. எனவே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது கவர்னரின் செயல்பாடுகள் குறித்த கோரிக்கை வைக்கப்படலாம் என்று தெரிகிறது.குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதக்களுக்கு கவர்னர்கள் முடிவெடுக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில் தான் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் டில்லி பயணம் அமைய இருக்கிறது.