பழனியை சேர்ந்தவர் ஆறுமுகம், 30, மரம் ஏறுபவர். இவரது மனைவி ஜோதிமணி, 27, இவர் நேற்று முன் தினம் தனது கணவரிடம் சண்டையிட்டு கோவத்தில், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தனது அம்மாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஆறுமுகமும் அங்கு வந்து தனது மனைவியை அடித்துள்ளார். இதனை கண்ட அவரது அம்மா காமாட்சி, 45, மற்றும் அவரது உறவினர் ஈஸ்வரன், 48, ஆகியோர் ஆறுமுகத்தை
தடுத்துள்ளனர். அப்போது சட்டையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆறுமுகம், காமாட்சி மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவரையும் குத்தியுள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.