கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சல் பை எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் பதாதைகளை ஏந்தி கொண்டனர். மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி திண்டுக்கல் சாலை வழியாக சுமார் 2 கி.மீ வந்து அரசு கலைக் கல்லூரியில் முடிவடைந்தது.