தஞ்சாவூர் வழியாக புனிதத் தலமான காசி மாநகருக்கு அறிவிக்கப்பட்ட ஆன்மீக சுற்றுலா ரயில் பயணிகளின் வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு ஆன்மீக ரயில் காசிக்கு விடப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் சுற்றுலா திட்டத்தின் கீழ் மேற்கிந்திய ஆன்மீக சுற்றுலா ரயில் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக ஏற்கனவே ஒரு ரயில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது பயணிகளின் வரவேற்பின் அடிப்படையில் கூடுதலாக மேலும் ஒரு ரயில் இயக்கப்படவுள்ளது. சுற்றுலா வண்டி எண் SZBG03. இவ்வண்டியில் சுற்றிக் காட்டப்படவுள்ள ஆன்மீக நகரங்கள் ஷீரடி சாய்பாபா கோயில், சிங்கனாபூர் சனீஸ்வரன் கோயில், திரிம்பகேஷ்வர் கோவில், நாசிக் பண்டரிபுரம் (பந்தர்பூர்) பாண்டுரங்கர் கோவில், மந்திராலயம் ராகவேந்திர சுவாமி கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் சென்று வரலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.