தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 107 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வந்தது இந்த நிலையில் இன்று காலையில்
மிதமான மழை பெய்ய தொடங்கியதால் வெப்பம் விலகி வீடுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், காந்திகிராமம், ராயனூர், தாந்தோணி மலை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே போன்று சுற்றுவட்டார பகுதிகளான கிருஷ்ணராயபுரம், மாயனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.