கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடிவேல் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன், ஸ்ரீ பாலமுருகன் ,ஸ்ரீ கருப்பண சுவாமி உள்ளிட்ட பரிவார ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய அருகே ஆலயத்தின் சிவாச்சாரியார் பிரத்தியேக யாகசாலை அமைத்து முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நான்கு கால யாக வேள்வி நடத்தினார்.
அதை தொடர்ந்து நான்கு கால யாக கேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித கலசத்திற்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது.
பின்னர் மேல தாளங்கள் முழங்க நான்கு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு ஆலயம் வலம் வந்தனர். அதை தொடர்ந்து கோபுரம் கலசம் வந்தடைந்த பிறகு
சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மூலவர் அன்ன காமாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வடிவேல் நகர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.