தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக 13 வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காலை தஞ்சையில் நடந்தது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில் இன்று 11, 451 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 302 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும் 11 மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும் விழா மேடையில் கவர்னர் வழங்கினார். விழாவில் திருச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தியும் இன்று கவர்னரிடம் முனைவர் பட்டம் பெற்றார்.
மொத்தம் 1213 மாணவர்களுக்கு நேரடியாக தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.