Skip to content
Home » திருச்சி அருகே ஸ்ரீ சாமவேதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

திருச்சி அருகே ஸ்ரீ சாமவேதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் ஸ்ரீலோக நாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கிறார்.

குரு பார்வை கோடி நன்மை. குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும். மேஷ ராசியில் பயணம் செய்யும் போகும் குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. இதுநாள் வரை விடைய ஸ்தானத்தில் இருந்த குரு இனி ஜென்ம குருவாக அமர்கிறார்.

இந்நிலையில் திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலோக நாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள
ஸ்ரீஅபயகர தட்சிணாமூர்த்தி யாக எழுந்து அருள் பாலிக்கும் நவகிரக ஸ்ரீ பிரஹஸ்பதி குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைவதன் பொருட்டு ஸ்ரீ அபயகர
தட்சிணாமூர்த்திக்கும் நவகிரகம் குரு பகவானுக்கும் சிறப்பு பரிகார

நவக்கிரஹ யாகமும் சிறப்பு மகா அபிஷேகம் பரிகார அர்ச்சனையும் நடைபெற்றது. முன்னதாக பல்வேறு திரவிய பொருள்களால் விக்னேஸ்வர பூஜை,பூர்னாஹூதி உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்றது
ஸ்ரீ குரு அருள் பெற்று குரு கடாக்ஷம் பரிபூரணம் நலம் பெறும் மீனம்,மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்கள்
பரிகாரம் செய்வதால் பலன்கள் பெருகும்.

இந்த குரு பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நித்தியா தலைமையில் கோயில் குருக்கள்கள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *