Skip to content
Home » அட்சய திருதியை……. தங்கம் வாங்க இதுதான் நல்ல நேரம்….

அட்சய திருதியை……. தங்கம் வாங்க இதுதான் நல்ல நேரம்….

  • by Authour

இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் ‘அட்சய திருதியை’ பண்டிகை கொண்டப்படுகிறது. இந்த நாளில் முதலீடு செய்யவும், புதிய விஷயங்களை துவங்கவும், புதிய பொருட்களை வாங்கவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.

வருடத்திற்கு முன்பு இப்படியொரு பண்டிக்கை பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை, ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. இதேபோல் முன்பெல்லாம் நகைகள் மட்டும் தான் இந்த அட்சய திருதியை நாளுக்கு சிறப்பு விற்பனையை அறிவிக்கும். ஆனால் தற்போது எலட்க்ரானிக்ஸ் முதல் ரியல் எஸ்டேட் வரையில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மக்களும் அட்சய திருதியை போன்ற நல்ல நாளில் வாழ்க்கை மேம்படும் வகையில் சிறப்பான முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நாளில் தங்கம், வெள்ளி, வைரம் என எந்தொரு மினுமினுக்கும் பொருட்களையும் வாங்கலாம். இதில் நாட்டம் இல்லாதவர்கள் கட்டாயம் லாபம் தரும் என கணிக்கப்படும் இடத்தில் முதலீடு செய்யலாம். அது ரியல் எஸ்டேட், பங்குகளாகவும் இருக்கலாம். இந்த வருடம் அட்சய திருதியை பண்டிகை ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டப்படுகிறது. அட்சய திருதியை-யின் பெரும் பகுதி நேரம் ஏப்ரல் 22 ஆம் தேதி வரும் காரணத்தால் அது ஞாயிற்றுகிழமை என்பதால் ரியல் எஸ்டேட் பதிவுகளை செய்ய முடியாது. இதனால் உங்கள் முதலீட்டை சரியாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இந்த நாளில்ரியல் எஸ்டேட், தங்கம், பங்குகளை வாங்குவதை தாண்டி. பலர் புதிய வணிகங்கள், புதிய வலைத்தளங்கள், புதிய உறவுகள் மற்றும் பிற முயற்சிகளையும் தொடங்குகிறார்கள். இந்த நாளில் துவங்கும் விஷயம் காலம் முழுக்க நிலைத்திருக்கும், லாபத்தையும், மகிழ்ச்சியை அளிக்கும் என்பது தான் இப்பண்டிகையின் நம்பிக்கை.

முக்கிய நேரம் : அட்சய திருதியை பூஜை முகூர்த்தம் ஏப்ரல் 22, 2023 காலை 07:49 முதல் மதியம் 12:20 வரை. அட்சய திருதியை திதி ஏப்ரல் 22, 2023 அன்று காலை 07:49 மணிக்கு தொடங்குகிறது. அட்சய திருதியை திதி ஏப்ரல் 23, 2023 அன்று காலை 07:47 மணிக்கு முடிவடைகிறது. முக்கிய நகரங்கள் : ஏப்ரல் 22 ஆம் தேதி 07:49 AM to 12:20 PM – டெல்லி, 07:49 AM to 12:19 PM – நொய்டா, 07:49 AM to 12:21 PM – குர்கான், 07:49 AM to 12:22 PM – சண்டிகர், 07:49 AM to 12:26 PM – ஜெய்ப்பூர், 07:49 AM to 12:38 PM – அகமதாபாத், 07:49 AM to 12:37 PM – மும்பை, 07:49 AM to 12:33 PM – புனே, 07:49 AM to 12:18 PM – பெங்களூரு, 07:49 AM to 12:15 PM – ஹைதராபாத், 07:49 AM to 12:08 PM – சென்னை, 05:10 AM to 07:47 AM, ஏப்ரல் 23 – கொல்கத்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *