Skip to content
Home » கரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. சுமார் 106 டிகிரி பாரன்ஹிட் அதிகமான வெப்பநிலை வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக 12 மணியிலிருந்து 4 மணி வரை பொதுமக்கள் அதிகளவில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

அந்த நேரங்களில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும்

பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை வேலையில் பணம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு கரூர் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென காற்று வீச ஆரம்பித்தது காற்று வீசியதை தொடர்ந்து லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது.

கரூர் மாநகரம் பகுதியான தான்தோன்றிமலை, காந்திகிராமம், ராயனூர்,அரவக்குறிச்சி மாயனூர் கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் மழையால் சுற்றுப்புற வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

கோடைகால தொடங்கியுள்ள நிலையில் திடீர் மழையால் பொது மக்களை சிறிது நிம்மதியடைந்தனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!