திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு இன்று 86வது பிறந்த நாள். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததோடு, பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்தார். ‘
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், தலைவர் கலைஞருக்கும், பேராசிரியருக்கும் அன்பு இளவல். செவித்திறன் பாதிக்கப்படும் அளவுக்கு நெருக்கடிநிலைக்கால சிறைக்கொடுமையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட தீரர். என் மீது அளவற்ற அன்பு கொண்ட அண்ணன். அகவை 86 காணும் ஆற்காட்டார் நூறாண்டு தாண்டி வாழ்க என்று தெரிவித்துள்ளார்.