தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளராகவும், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராகவும் இருந்தவர் சேகர். இந்த கட்சிக்கு இருந்த ஒரே பேரூராட்சி தலைவரும் இவர் தான். இவரை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் பொது செயலாளர் டிடிவி.தினகரன் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் சேகர், சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சேகருடன், ஒரத்தநாடு அமமுக ஒன்றிய செயலாளர்கள் ஆசைதம்பி, சிவ ராஜேஷ் கண்ணன் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.