கன்னியாகுமாரி.திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் அல்லது திருச்சியை சேர்ந்தவரா நீங்கள்? சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியை நேரடியாக காண ஏற்பாடு செய்யப்படும் விசில் போடு எஸ்பிரஸில் பயணிக்க வாய்ப்பு..
விசில் போடு எக்ஸ்பிரஸில் பயணிக்க வாய்ப்பை பெறுவதற்கான நேரடி போட்டிகளை திருநெல்வேலி, மதுரை, திருச்சியில் நடத்துகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
நேரடி போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் நேரம்:
திருச்சி : ஏப்ரல் 22 லா சினிமா. 11 AM – 7.30PM
மதுரை: ஏப்ரல் 2- விஷால் டி மால், 11AM – 7:38 PM) திருநெல்வேலி: ஏப்ரல் 23 – ராம் முத்துராம் சினிமா, 11 AM – 730 FM
விசில் போடு எக்ஸ்பிரஸ் ….
தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்கள் சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் போட்டியை நேரடியாக கண்டுகளிக்க வாய்ப்பளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இலவச ரயிலினை ஏற்பாடு செய்கிறது.
கன்னியாகுமாரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியை சேர்ந்த சுமார் 750 ரசிகர்கள் ஏப்ரல் 30ம் தேதி நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான போட்டியை காண்பதற்கான இலவச சுற்றுப்பயணத்தில் பங்குபெறும் வாய்ப்பை பெறுவார்கள்
கன்னியாகுமரியில் இருந்து 29ம் தேதி மாலை ரயில் புறப்படும் போட்டி முடிந்த பின் 31ம் தேதி இரவு சென்னையில் இருந்து ரயில் புறப்படும்
பயணச் செலவு, தங்கும் செலவு, உணவுச் செலவு ஆகியவற்றை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் போட்டிக்கான டிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மெர்ச்சண்டைஸ் வழங்கப்படும்.
விசில் போடு எக்ஸ்பிரஸில் பயணிக்க விரும்பும் 18 வயதுக்கு மேலான் ரசிகர்கள், (http:://www.chennaisuperkings.com/whistlepoduexpress/#/} என்ற வலைத்தளத்தில் ஏப்ரல் 14ம் தேதி முதல் பதிவு செய்யலாம்.