வடகிழக்கு பருவமழை காலம் முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், இன்று (திங்கட்கிழமை) முதல் 22-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும், நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதற்கிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், இன்று (திங்கட்கிழமை) முதல் 22-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும், நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் தொடர்ச்சியாக, 21-ந் தேதி (நாளை மறுதினம்), 22-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதுதவிர, நாளை மறுதினம் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், 22-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.