அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று அவசர கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நகராட்சி கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐந்து தீர்மானங்கள் வாசித்து ஐந்தாவது தீர்மானம் வாசித்து கூட்டம் துவங்கும் போது அதிமுக கவுன்சிலர் செல்வராஜ் பொது நிதியை முறையாக ஒதுக்கீடு செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
மேலும் கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதில் பொது நிதி மற்றும் கலைஞர் மேம்பாட்டு நிதியில் 2022 – 23 ஆம் ஆண்டில் சுமார் ஒரு கோடி அளவிலான சாலை மேம்பாட்டு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த
பணிகள் 4, 17, 20 ஆகிய பெண்கள் வார்டுகள் என்பதால் நகராட்சி அதிகாரிகள் அதனை புறக்கணித்து ஆளுங்கட்சிக்கு சாதமாக ஒதுக்கீடு செய்துள்ளனர்.
மேலும் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட ஏழு ஏரிகள் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை டெண்டர் விடாமல் ஆளுங்கட்சியினரே எடுத்துக் கொண்டதாகவும், ஒரு கோடி ரூபாய் நிதியை நகராட்சி நிர்வாகம் ஆளுங்கட்சியினருக்கு வழங்கியதாலும் கூட்டத்தை புறக்கணித்து கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
இதனால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்டத்தை முடித்தும், முடிக்காமலும்.தீர்மானத்தை முழுதும் படிக்காமல் கூட்டத்தை நிறைவு செய்து கலைந்து சென்றனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டது.