Skip to content
Home » காதல் காவலர் பணிமாறுதலில் சென்றதால் பெண் போலீஸ் தற்கொலை….

காதல் காவலர் பணிமாறுதலில் சென்றதால் பெண் போலீஸ் தற்கொலை….

திருச்சி மாவட்டம், உறையூர் மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவருடைய மகள் கவிப்பிரியா. 27 வயதான இவர் நாகை ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்றவர் மதியம் சாப்பிடுவதற்காக அவர் தங்கி இருந்த காவலர் குடியிருப்புக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மீண்டும் அவர் பணிக்கு வரவில்லை என்பதால் சக காவலர்கள் கவிப்பிரியாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் செல்போன் அழைப்பை வெகுநேரம் ஆகியும் எடுக்காததால் சக காவலர்கள் சந்தேகம் அடைந்து அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால், கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காத காரணத்தினால் கதவை உடைத்து காவலர்கள் உள்ளே சென்றனர். அங்கு பெண் காவலர் கவிப்பிரியா துப்பட்டாவால் தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளார். பின்னர் தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டார். கவிப்பிரியா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காதல் பிரச்சனையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். பெண் காவலர் கவிபிரியா தன்னோடு பணிபுரிந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு காவலரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த காவலர் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் நிலையத்திற்கு பணி மாறுதலில் சென்ற நிலையில் கடந்த ஒரு வார காலமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்ததாகவும், அதன்காரணமாக பெண் காவலர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. கடந்த 2020-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!