சௌதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற தொழுகையில், ஒரு மாத காலமாக நோன்பு நோற்று விரதமிருந்த
இஸ்லாமியர்கள் மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை ஒருவரையொருவர் பகிர்ந்துகொண்டனர். உலக அமைதி வேண்டியும், நாட்டுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.