திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023 – 2024 முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84(1)ன் கீழ் 5% ஊக்கத்தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5% முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும், இம்மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.