மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்காக ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே மாதம் 7ம் தேதி நடக்கிறது. எம்.பி.பி.எஸ் நீட் நுழைவுத்தேர்வு எழுத, முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு அதிகமானவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதாவது, 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மராட்டியம் 2.80 லட்சம், உ.பி.2,70 லட்சம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
