மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட 10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக் கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புதல் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் துரைமுத்து, பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் அய்யப்பன், காசிபாஸ்கரன், காமராஜ், தேவி குருசெந்தில், பூபதி, கமல்ராஜா, குமரேசன் உள்ளிட்ட வன்னியர் சங்க மற்றும் பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.