தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தீத் தொண்டு வாரத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மீட்புப்பணி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
வீரர்கள் 30 பேருக்கு,கதர் துண்டுகள், மீட் அமைப்பு வெளியிட்ட திருவாசகம் நூல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நீதி நூல்,இலக்கியம், சமூகப் பணிகள், சமூக நல்லிணக்கம்,சமூக அக்கறை சார்ந்த விழிப்புணர்வு செய்திகளுடன், தவத்திரு.
திருவடிக்குடில் சுவாமிகள் உரையாற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய,”ஜோதிமலை இறைபணி திருகூட்டத்தின் சமய, சமூகப் பணிகள்” என்னும் நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதில்
கும்பகோணம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணைச் சேர்மன் ஆன்ட்ரியூ ரொசாரியோ கலந்துகொண்டு பேசினார். குடந்தை ரத்ததான டிரஸ்ட் ஷேக் தாவூத் முன்னிலை வகித்தார். முன்னதாக தீயணைப்பு நிலைய அதிகாரி சேகர் வரவேற்றார். மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் மலர்ச்சி அறக்கட்டளை சார்பில் சபாபதி, அம்பிகா இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.