திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி. மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்யராஜ். இவர் தேயிலை தூள் மற்றும் மெழுகுவர்த்தி சப்ளை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதியன்று இவருடைய போனுக்கு ஒரு சதவீத வட்டிக்கு தனிநபர் கடன் என்ற பெயரில் மெசேஜ் வந்துள்ளது. அதை நம்பி அந்த போன் நம்பருக்கு அவர் கால் செய்து 3 லட்சம் கடனாக கேட்டுள்ளார். பின்னர் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை whatsapp மூலம் பெற்று கடனை செயல் ஆக்கப்படுத்துவதாக 7080 ரூபாய் செயலாக்க கட்டணமாக கேட்டு அவரிடம் இருந்து பெற்றுள்ளனர்.
மீண்டும் அந்த மர்ம நபர்கள் கடன் செயலாக்கம் திரும்பிச் செலுத்தும் தொகை மற்றும் பணப்பரிமாற்ற கட்டணம் ஜிஎஸ்டி கட்டணம் போன்ற விதிமுறையின் கீழ் சில தொகையை கேட்டுள்ளனர். அந்த தொகையும் கொடுத்துள்ளார். அதன்பின் மர்ம நபர்கள் கடன் தருவதற்காக தங்களது வீட்டை போட்டோ எடுக்க அதிகாரிகள் வருவார்கள் அவரிடம் 28, 000 பணம் தர வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஆரோக்கியராஜ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது குறித்து திருச்சி சைபர் கிராம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.