நில அளவை கள அலுவலர்களின் பல்வேறு பணி சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உதவி இயக்குனர் வரையிலான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் உள்பட நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பை சேர்ந்தவர்கள் பலர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.