Skip to content
Home » பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர் தரணி முருகேசன். இவரது வீடு ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ளது.  இரவு 9 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தரணி முருகேசனின் வீட்டருகே நின்ற அவரது காரில் மோதினர். அப்போது அங்கிருந்த பாஜகவினர் மற்றும் தரணி முருகேசனின் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது இருவரும் தாங்கள் வைத்திருந்த பெரிய அரிவாளை எடுத்து அவர்களை வெட்டினர். இதில் தோட்டத் தொழிலாளி எல்.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (39) காயமடைந்தார். அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. பி.தங்கதுரை, டிஎஸ்பி ராஜா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தரணி முருகேசனிடம் விசாரித்தனர். பிடிபட்டவர்கள் சென்னை எண்ணூரைச் சேர்ந்த மோகன்(34), புதுவண்ணாரப்பேட்டை சுரேஷ்(34) எனவும், இவர்கள் கூலிப்படையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. ராமநாதபுரம் எம்எஸ்கே நகரைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் அழைத்ததன் பேரில் அவர்கள் தரணி முருகேசனை கொலை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பவத்தில் காயமடைந்த கணேசன் அளித்த புகாரின்பேரில், மோகன், சுரேஷ், விக்னேஸ்வரன், வழக்கறிஞர் சண்முகநாதன், கதிரவன், கதிரவனின் ஓட்டுநர் பாலமுருகன் என்ற சேட்டை பாலா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விக்னேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மோகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 18 வழக்குகள், சுரேஷ் மீது 8 வழக்குகள், விக்னேஸ்ரவன் மீது பல வழக்குகள், பாலமுருகன் மீது 5 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாலமுருகனை கைது செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!