திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ஒண்டி முத்து என்பவரின் மகள் தேன்மொழி (21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி போனவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ஒண்டிமுத்து எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேன்மொழியை தேடி வருகின்றனர்.