திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடங்கள் இயங்கி வருகிறது இந்த வணிக வளாகங்களில் அதிகமாக டீக்கடைகள் இயங்கி வருகின்றன. இன்று விநாயகா என்ற டீக்கடையில் வழக்கம் போல் உரிமையாளர் பஜ்ஜி போன்ற பலகாரங்களை போட முற்பட்டார். அதற்கு அவர் பயன்படுத்திய இண்டேன் எரிவாயு சிலின்டரில் கசிவு ஏற்பட்டதால் தீ சட்டன எரிவாயுவில் உள்ள கேசில் பற்றியது. இதனால் மளமளவென தீ பரவ் தொடங்கியது. இதனை தொடர்ந்து துறையூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மீதி உள்ள 4 எரிவாயு சிலிண்டரில தீ பரவாமல் தடுத்தனர் இருப்பினும் பெரும் பொருள் சேதம் ஏற்பட்டது இது குறித்து துறையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
திருச்சி அருகே பஸ் ஸ்டாண்டில் திடீர் தீ விபத்து….. உயிர்தப்பிய பொதுமக்கள்…
- by Authour
