உத்தரபிரதேச மாநிலம் புடானில் 17 வயது சிறுமியை காணவில்லை என்று போலீசாருக்கு புகார் வந்தது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். யாரும் சிறுமியை கடத்தினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமி, வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வயல் ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுமி, கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறிய போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தெரியவரும் என்றும் கூறினர்.