ராகுலின் எம்.பி பதவியை பறித்த ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மருதையன், கந்தசாமி, வெங்கடேஷ், பாலு, சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாமன்ற உறுப்பினர் அய்யப்பன், சுவாமிமலை ராமலிங்க ஸ்தபதி ஆகியோர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் பாலு, கணபதி, சுரேஷ், ஐயப்பன், விஜயமோகன், சீனிவாசன், சண்முகம், இருளப்பன், மீனாட்சி, குருகாசிநாதன், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நலங்கிள்ளி நன்றி கூறினார்.
