திமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார் அப்போது ரபேல் வாட்ச் பில்லையும் காட்டினார். அந்த வாட்ச் நண்பரிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு வாங்கியதாவும் கூறினார். வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல் எல்லாமே நண்பர்கள் தான் தருகிறார்கள்இது குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- “அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை; சொத்து, ஊழல் பட்டியலை வெளியிட்டால் வெளியிடட்டும். துணைவேந்தர் விவகாரம் உள்ளிட்ட 11 மசோதாக்கள் ஆளுநர் வசம் இன்னும் நிலுவையில் உள்ளது” என்று கூறினார்.
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, அதிமுகவினரின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். இது குறித்து நிருபர்கள் கேட்க வேண்டும் என்றார்.