கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி தாண்டி சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சி சார்பில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக்
கொள்ளும் வகையில் மாநகரப் பேருந்து நிலையத்திற்குள் நீர், மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த நீர் மோர் பந்தல் கோடை காலம் முழுவதும் செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.