Skip to content
Home » கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ளது வீரநாராயண பெருமாள் கோயில். இக்கோயிலுக்குச் சொந்தமாக உட்கோட்டை கிராமத்தில், பட்டா எண் 11-இல் 45.52 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலம் மணிவண்ணன் என்பவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் செந்தமிழ்ச்செல்வி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளத்திடம் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆலய நிலங்கள் தாசில்தார் கலைவாணன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது

விசாரணையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ள மணிவண்ணன் யார் என்பது தெரியாது எனவும் அப்படி ஒருவர் இப்பகுதியில் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனினும் கோவிலுக்கு சொந்தமான நிலம் பல்வேறு தரப்பினர் மூலம் விவசாயம் செய்யப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நிலத்தை வீரநாராயண பெருமாள் பெயரில் பட்டா மாற்றம் செய்ய கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.4,50,00,000 இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!