புதுகை சமஸ்தானத்தின் ராணி ரமாதேவி(83) வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு அடுத்து செல்லப்பட்டது. மறைந்த ராணி உடலுக்கு கலெக்டர் கவிதா ராமு, மற்றும் ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து இன்று அவரது உடல் இறுதி சடங்கு, இச்சடியில் உள்ள
அவரது பண்ணை வீட்டில் நடந்தது.இதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன், புதுகை அப்துல்லா எம்.பி, முன்னாள் எம்.பி. பிவி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, சிவகங்கை ராணி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்