திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் வட்டம் காட்டுப் புத்தூர் அருகே உள்ள சீலைப் பிள்ளையார்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர் சாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது இதில் ஊர் பொதுமக்கள் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வர்களுக்கு சீர்வரிசையை பொதுமக்கள் எடுத்து வந்தனர்.
பின்பு மங்களஇசை விக்னேஸ்வரர் பூஜை புண்யாஹம்,பஞ்சகவ்யம், கலசபூஜை அக்னிகார்யம், திரவ்யாகுதி,பூர்ணாகுதி,மற்றும் மஹாதீபாரதனை நடைபெற்றது.
அம்மனுக்கு மாலை மாத்துதல் நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் இருவர் தங்களது கரங்களில் அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியில் பல்வேறு விதமான மங்கள நடனத்தை ஆடினார்கள் பின்பு அம்மனுக்கு மாங்கல்யதாராணம்நடைபெற்றது.
மகாதீபாரதனை நடைபெற்றது இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை கரூர் வாங்கல் ஸ்ரீ ரவீஸ்வரர் திருக்கோயில் சிவாச்சாரியார் எஸ். சாம்பமூர்த்தி குருக்கள் குழுவினர் மற்றும் பரம்பரை அறங்காவலர் பெங்களூர் எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஐயர் கோயில் நிர்வாகி சீலைப் பிள்ளையார்புத்தூர் எம். ஆறுமுகம் ஆலய அர்ச்சகர் பி. குமரவேல் மற்றும் சிவாச்சாரியார்கள் சிறப்பாக செய்தார்கள் இந்த நிகழ்ச்சிக்கான மங்கல இசையை காட்டுப்புத்தூர் அக்ரஹாரம் பிரபாகரன் குழுவினர் சிறப்பாக வாசித்தனர் மேலும் பெண்களுக்கு மாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது 2500- பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிலைப்பிள்ளையார்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் பெண்கள் சிவாச்சாரியார்கள் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பெற்றனர்.