நாகப்பட்டினம் மாவட்டம் , வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் உதவும் நண்பர்கள் சார்பில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. கோவில் திருவிழாக்களின் போது ஆலயத்தை சுற்றிலும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதில் காமேஸ்வரம் பகுதி சார்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு ராமர் ,சீதை,விவசாயத்தை பாதுகாப்போம்,ஆலய வழிபாடு குறித்தும்
ஆலய தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி, பூக்கோலம் உள்ளிட்ட கோலங்களை இயற்கையான பொருட்களை பயபடுத்தி பல்வேறு வகையான வண்ண கோலங்கள் வரைந்திருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சிறந்த கோலத்திற்கான முதல் மூன்று பரிசுகளை தட்டி சென்றுள்ளனர், இதில் 50க்கும் மேற்பட்ட கோலங்கள் வரையபட்டிருந்தது இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்