தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப் பெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் பங்கேற்றார். கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் 30 பேருக்கு மேல் கண் பரிசோதனை மேற்க் கொண்டார். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 11 பேரை கண்ணில் அறுவை சிகிச்சை மேற்க் கொண்டு ஐ.ஓ.எல் லென்ஸ் பொருத்தி பார்வையளிக்க தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார். இதேப் போன்று திருவையாறு அருகே நடு காவேரி மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் நடைப் பெற்ற கண் சிகிச்சை முகாமில் கண் மருத்துவ உதவியாளர் ரெங்கநாயகி 50 பேருக்கு மேல் கண் பரிசோதனை மேற்க் கொண்டார். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 13 பேரை அறுவைச் சிகிச்சை மேற்க் கொள்ள தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன் பங்கேற்றார்.