காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் ரமலானை முன்னிட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடைப் பெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வன், திமுக பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர், ராயல் அலி, சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் ரிபாயி , சமூக நீதி நற்பணி மன்ற நிர்வாகிகள் , அ.தி.மு.க இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலர் சண்முக பிரபு, காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் முபாரக் ஹீசைன், மஸர்ரத் ,சிக்கந்தர், மாலிக், அஷ்ரப் அலி, ராஜகிரி, பண்டார
வாடை, வழுத்தூர், அய்யம் பேட்டை, வடக்கு மாங்குடி , பாபநாசம் பள்ளி வாசல் நிர்வாகிகள், பாபநாசம் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர்கள் சாப்ஜான், சம்பந்தம், நவநீத கிருஷ்ணன், கிங்ஸ் லயன்ஸ் கிளப் தலைவர் தம்பி முகமது இப்ராகிம், ஆனந்த் காந்தி, வெல்பேர் நிர்வாகிகள் ,தி.முக.இளைஞரணி மணிகண்டன், அ.ம.மு.க மாநில சிறுபான்மை நிர்வாகி ரபீக் , எஸ்.டி.பி.ஐ, த.மு.மு.க, ம.ம.க , முஸ்லீம் லீக் , ம.ஜ.க , உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொது மக்கள் பங்கேற்றனர்.