பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா என்ற பாடல்… அன்னமிட்ட கை படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல். படத்தை பார்க்காமல் பாடல் வரிகளை மட்டும் சிந்தித்தால் இதன் பொருள் நமக்கு விளங்காது. ஆனால் ஆப்பிரிக்காவில் ஒரு பெண் 40 வயதில் 44 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை புரிந்து உள்ளார்.
இத்தனைக்கும் காரணமான அவளது கணவன் என்னால் குழந்தைகளை வளர்க்க முடியாது என தப்பி ஓடிவிட்டான். இனியாவது அவன் வேறு எங்கும் குழந்தைக்கான முயற்சி செய்யாமல் இருந்தால் சரி.
இனி, 44 குழந்தைகள் பெற்ற பெண்ணின் சாதனை… அல்ல…. சோதனை கதையை பார்ப்போம்.
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்தவர் மரியம் நபடான்சி. இவருக்கு 12 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அவர் தனது 13-வது வயதிலேயே கர்ப்பமானார். அவருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர் தான் உலகின் மிகவும் ஸ்பெர்டைல் பெண்ணாக கருதப்படுகிறார். அதன் பிறகு தொடர்ந்து குழந்தைகள் பெற்றெடுத்த மரியத்திற்கு தற்போது 40 வயது ஆகிறது. இதுவரை அவருக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளது.
இதில் 4 முறை இரட்டை குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பது 5 முறை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் 5 முறை பிறந்துள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு இருக்கும் ஹைப்பர் ஓவுலேட் என்ற நிலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவர் மொத்தம் 44 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அதில் 6 குழந்தைகள் உயிரிழந்து விட்டது. இப்போது 20 சிறுவர்களும், 18 சிறுமிகளும் மட்டுமே இருக்கிறார்கள். மரியத்தின் சொத்துக்களை எல்லாம் எடுத்து கொண்டு அவரது கணவர் குடும்பத்தை விட்டு ஓடி விட்டார். இதனால் மரியம் தனது குழந்தைகளை வளர்க்க கஷ்டப்பட்டு வருகிறார்.