Skip to content

நாய் குறுக்கே வந்ததால் விபத்து…. டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் லோகேஸ்வரன்(17). இவர் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே இன்று தேர்வினை முடித்துவிட்டு நண்பருடைய ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி வாயிலில் நின்று கொண்டிருந்த சக நண்பர்களான கிருஷ்ணா மற்றும் பிரசன்னா ஆகியோரை தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையை நோக்கி சென்று கொண்டிருந்தார். மன்னம்பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் அருகில் இருந்து கோயில் கேட்டை உடைத்து உள்ளே சென்று விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த லோகேஸ்வரன் கோயிலின் சுவற்றில் மோதி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணா மற்றும் பிரசன்னா ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து இறந்த லோகேஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயமடைந்த சக நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய நாயும் உயிரிழந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!