சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு பதிவுகளை பதிவிட்ட பாஜக மாநில தொழிற்பிரிவு(BJP TN industrial cell) துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை கணபதி புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தை தொடர்ந்து காளப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.