சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள்? என சென்னை மாநகராட்சிக்கு,சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. அத்துடன், மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு , ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 18ல் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தது.
Tags:உயர்நீதிமன்றம்